பிரபல இசைக் கலைஞரும், மாடலுமான ஷீத்தல்கழுத்தறுத்து கொலை

by Editor / 17-06-2025 04:57:53pm
பிரபல  இசைக் கலைஞரும், மாடலுமான ஷீத்தல்கழுத்தறுத்து கொலை

ஹரியானா சோனிபட் பகுதியை சேர்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞரும், மாடலுமான ஷீத்தல் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 14-ம் தேதி படிப்பிடிப்புக்கு அஹார் கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால், படப்பிடிப்பு முடிந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது சகோதரி நேஹா, காவல்துறையில் புகாரளித்தார். இந்நிலையில், காண்டா கிராமத்தில் உள்ள கால்வாயில் ஷீத்தல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via