தஞ்சை கோவிலில் கொள்ளை அடித்த இரண்டு பேர் கைது

by Staff / 17-10-2022 04:14:21pm
தஞ்சை கோவிலில் கொள்ளை அடித்த இரண்டு பேர் கைது

கோவில் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் கொள்ளை தஞ்சை அருகே வல்லம் திருச்சி சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் எதிரே முத்தாலம்மன் கோவில் உள்ளது சம்பவத்தன்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர் இது தொடர்பாக வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் நித்தியா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தனிப்படை சிறப்பு சட்ட சாமிநாதன் ஏட்டுகள் புவனேஷ் சிவகுமார் வினோத் பாண்டியன் ராஜதுரை ரஞ்சித் குமார் ஆகியவை கொண்ட தனிப்படையினர் பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீஸ் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நின்றிருந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர் விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த சிவா என்கிற சிவ பாலகனேஷ் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த நாகராஜ் ஆகியோர் என்பதும் கோவிலில் கொள்ளை அடித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories