மாணவியை கற்பழித்து மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது.

by Staff / 17-10-2022 04:00:30pm
மாணவியை கற்பழித்து மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது.

மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த (17) மாணவி என்பவர் டிவிஎஸ் பள்னியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இம் மாணவியை ஐயர் பங்களா உச்சபரம்பு மேடு கோதாவரி தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் சந்துரு (20) என்பவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மாணவியை நரிமேடு சிங்கராயர் பகுதியில் ஒரு கடைக்கு அழைத்துச் சென்று பின்புறமாக வைத்து பலமுறை கற்பழித்துள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ படமும் எடுத்து அந்த வீடியோவை காட்டி அந்த சிறுமியை மிரட்டி 15 பவுன் தங்கக் காசுகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை பறித்துள்ளார்.

இதை அறிந்த மாணவியின் தந்தை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் மாணவியை கற்பழித்து பணம் நகை பறித்த வாலிபர் சந்துருவை போலீசார் கைது செய்தனர்.போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo