தேவதை கோயில் ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம்

by Staff / 25-10-2022 12:56:18pm
  தேவதை கோயில் ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம்

கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், பீதர் தாலுகாவில் உள்ள ஹவுராத் கிராமத்தில் கடந்த 600 ஆண்டுகளுக்கு முன் தீபாவளி பண்டிகை நாளில் ஆண், பெண் ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் வைபவம் தொடங்கப்பட்டது. கடந்த 600 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வழக்கத்தை கிராம மக்கள் இன்று வரை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இவ்வாண்டு தீபாவளி நாளான நேற்று கிராமத்தில் ஆட்டு குட்டிகளுக்கு திருமணம் நடந்தது. கிராமத்தை சேர்ந்த சிறுவர் முதல் முதியோர் வரை காலையில் எண்ணை வைத்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து கிராமத்தில் உள்ள தேவதை கோயில் திடலில் கூடினர். இதையடுத்து ஆண், பெண் ஆட்டுக் குட்டிகளை குளிப்பாட்டி புத்தாடை அணிந்து, மாலைகள் சூடி நெற்றியில் குங்குமம், திருநீரிட்டு அழைத்து வந்தனர். பின்னர் திருமணம் நடத்தி வைத்தனர்.

 

Tags :

Share via