பட்டாசு வெடித்ததில் 5 இடங்களில் தீவிபத்து

by Staff / 25-10-2022 01:00:04pm
 பட்டாசு வெடித்ததில் 5 இடங்களில் தீவிபத்து

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று இரவு பட்டாசு வெடித்ததில் 5 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் ராக்கெட் வெடித்ததில் தென்னை மரம் ஒன்றில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதேபோல் தெங்கம் புதூர் பகுதியில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தக்கலை அருகே புலியூர் குறிச்சி பகுதியில் ராக்கெட் வெடித்து சிதறியதில் தென்னை மரம் எரிந்தது. அசம்பாவிதத்தை தடுக்க நடவடிக்கை கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால் விளை யில் நேற்று இரவு 8. 30 மணிக்கு தீபாவளி ராக்கெட் பட்டாசு வெடித்ததில் ஊர் தலைவர் பாலசுந்தரம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். இதே போல நேற்று இரவு 9. 30 மணிக்கு சாமிதோப்பை சேர்ந்த பையன் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நின்ற பனை மரத்தில் தீபாவளி ராக்கெட் பட்டாசு வெடித்து சிதறியதில் தீப்பிடித்து எரிந்தது. கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.

 

Tags :

Share via