மீனவர்கள் கைது கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து வரும் 10ஆம் தேதி இராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன் அறிக்கையில், பாஜக அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து சீரழித்து வருவதையும், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், சிறைவாசம் தொடர்கதையாகி வருவதையும் கண்டிக்கும் வகையில் பிப் 10 அன்று மீனவ அமைப்புகளை இணைத்துக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :