11 பேர் பலியான விவகாரம்.. சச்சின் டெண்டுல்கர் இரங்கல்

by Editor / 05-06-2025 03:33:51pm
11 பேர் பலியான விவகாரம்.. சச்சின் டெண்டுல்கர் இரங்கல்

சின்னசாமி ஸ்டேடியத்தில் 11 பேர் உயிரிழந்த விஷயத்தில் மனம் வேதனை அடைவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். RCB அணியின் வெற்றிகொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூரில் நடந்த இந்த துயரத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் தனது X பக்கத்தில், "பெங்களூரில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் இதயபூர்வமாக துணைநிற்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மாவுக்கு அமைதி கிடைக்க வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via