தமிழகத்தில் நடந்த என். ஐ. ஏ. சோதனையில் 4 பேர் கைது

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, கோவை, சென்னை உள்ளிட்ட 21 இடங்களில் என். ஐ. ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், பல்வேறு பயங்கரவாத செயல்கள், சட்ட விரோத மற்றும் தேச விரோத செயல்கள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக என்.ஐ.ஏ 4 பேரை கைது செய்துள்ளது. மேலும், 6 லேப்டாப்கள், 25 செல்போன்கள், 34 சிம் கார்டுகள் மற்றும் 3 ஹார்ட் டிஸ்க்குகளை பறிமுதல் செய்துள்ளது.
Tags :