எல்லா செல்களுக்கும் ஒரு சார்ஜர் தான் தீர்மானம் நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றியம்

by Staff / 08-06-2022 01:28:25pm
எல்லா செல்களுக்கும் ஒரு சார்ஜர் தான்  தீர்மானம் நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றியம்

2024 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர் களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆப்பிள் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வெவ்வேறு சார்ஜர்கள்  பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் விதவிதமான சார்ஜர் வாங்க வேண்டி உள்ளது. இதனால் ஏற்படும் பண விரயத்தை போக்குவதற்காக ஐரோப்பா முழுவதும் அனைத்து செல்போன்கள் கேமராக்கள் ஆகியவற்றின் ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சீ டைப் சார்ஜர்களை  பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் சார்ஜர் மற்றும்கனெக்ட்டர்  பின்னே மாற்றி வடிவமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories