ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்

by Staff / 12-04-2024 12:20:39pm
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாமக மாவட்டச் செயலாளர்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமா போட்டியிடுகிறார். பாமக மாவட்டச் செயலாளர் ஜோதி முத்துவுக்கும், தற்போதைய வேட்பாளர் திலகபாமாவுக்கும் இடையே பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஜோதி முத்துவின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், தேனியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜோதிமுத்து திமுகவில் இணைந்தார். இவருடன் முன்னாள் மாநில துணைத் தலைவர் சீனி வாசன், மாவட்ட அமைப்பு தலைவர் லைக்அலிமீரான் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

 

Tags :

Share via