தேசிய  நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து விபத்து மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி-இரண்டு பேர் காயம்                  

by Admin / 10-08-2024 02:20:13pm
 தேசிய  நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து விபத்து மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி-இரண்டு பேர் காயம்                  

 தேசிய  நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து விபத்து மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி-இரண்டு பேர் காயம்                  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை கட்டாரங்குளம் ஆர்ச் அருகே  திருநெல்வேலி டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த சிதம்பரநாராயணன் மகன் அருணகிரி (37) இவர் தனது தாயாருக்கு முதுகுத்தண்டு சிகிச்சைக்காக நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியேட்டரில் மோதி விபத்துக்குள்ளானது இதில் காரை ஓட்டி வந்த அருணகிரி (37) சிறிய காயங்களுடனும் அவரது மகன் ருத்ரேஷ் (10) கை முறிவு ஏற்பட்டும் அவரது தாயார் வனஜா (57) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ருத்ரேஷ் மற்றும் அருணகிரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ருத்ரேசிற்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது தொடர்ந்து வனஜாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் மேலும் விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தேசிய  நெடுஞ்சாலையில் கார் டயர் வெடித்து விபத்து மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலி-இரண்டு பேர் காயம்                  
 
Tags :

Share via