மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் முதல் தேதியிலிருந்து கொண்டாடப்படும் தமிழரின் வீரத்தைபறை சாற்றும் நிகழ்வு.நேற்று அவனியா புரத்திலும் இன்று பாலமேட்டிலும் நடைபெறுகிறது.இரண்டு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் நின்று சீறிவரும் காளைகளை அடக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.முதல்பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கும் காரும் இரண்டாவது பரிசாக விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கும் இருசக்கரவாகனமும் வழங்கப்படவுள்ளது.சிறந்த வீரர்,சிறந்த காளைகளுக்கும்இப்பரிசு வழங்கப்படுகிறது.உடனுக்குடன் மாடுபிடி வீரர்களுக்கு அண்டாக்களும் அமைச்சர் மூர்த்தி வழங்கும் தங்ககாசுகளும் வழங்கப்படுகின்றது
Tags :