நாளை நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர்தொடங்குகிறது.

by Editor / 03-12-2023 09:57:26am
நாளை  நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர்தொடங்குகிறது.

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. வரும் 22ஆம் தேதி வரை 15 அமர்வுகளாக இக்கூட்டத் தொடர் நடைபெறும்.
கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தவும், 21 மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அமைச்சர்கள் உட்பட 23 கட்சிகளைச் சேர்ந்த 30 பேர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்குமென அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tags : நாளை நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர்தொடங்குகிறது.

Share via