14 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்.. 19 வயது இளைஞன் கைது

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற 14 வயது சிறுமி, பரிசோதனைக்குப் பிறகு ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. கேரளாவின் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கடக்கலைச் சேர்ந்த 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது சிறுமி தனது தாயாரின் பாதுகாப்பில் உள்ளார்.
Tags :