அ.ம.மு.க தனது கூட்டணியை ஜனவரி மாதத்திற்குள் இறுதி செய்யும்
அ.ம .மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமு தி தலைவர் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை போலவே 2026 ஆம் தேர்தலில் நடிகர் விஜய் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார் என்று விஜயின் கட்சி ஆளும் திமுகவை மட்டும் இல்லாத அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் பிரித்து தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 2026 தேர்தல் களம் திமுக கூட்டணிக்கும் டி. வி .கே கூட்டணிக்கும் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும் என்றும் அ.ம.மு.க தனது கூட்டணியை ஜனவரி மாதத்திற்குள் இறுதி செய்யும் என்றும் தாங்கள் இணையும் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கையை தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதிலும் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
Tags :


















