காமெடி பீஸான உ.பி போலிஸார்!

by Editor / 18-06-2021 10:52:23am
காமெடி பீஸான உ.பி போலிஸார்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரில் நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சடலங்களை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். மேலும்ன் போலீசாரை நோக்கி கற்களை வீசத் தொடங்கினர். இதனால் போலீசார் பின்வாங்கினர்.

அப்போது அங்கிருந்த போலீசார் சிலர் பிளாஸ்டிக் சேர், கூடையை எடுத்து கவசமாக தலையில் அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். பெரும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு முறையான தலைக்கவசம், கவச உடை வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிளாஸ்டிக் ஸ்டூல், கூடையை கவசமாக அணிந்து பாதுகாப்புப் பணியில் நின்ற 4 காவலர்களை சஸ்பெண்ட் செய்து லக்னோ சரக ஐஜி உத்தரவிட்டார். போலீசாருக்கு தலைக்கவசம், கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டது. ஆனால் அவலர்கள் அதனை அணியாமல் அலட்சியமாக செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

 

Tags :

Share via