தாம்பரம் ரயில்நிலைய பணிமனை வளாகத்தில் தீ விபத்து!

சென்னை தாம்பரம் ரயில்நிலைய பணிமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தானது இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த தீவிபத்திற்கான காரணங்கள் குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீவிபத்து ஏற்பட்ட உடனேயே அங்கிருக்கக்கூடிய ரயில்வே பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் போராடி இந்த தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்து நடந்ததற்கு அங்கு கொட்டப்பட்டுள்ள மரப்பொருட்களும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல அங்கு ரயில்வே பராமரிப்புக்கு பயன்படுத்த கூடிய கிரீஸ் பொருட்கள், மரப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொட்டப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :