தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: அன்புமணி கண்டனம்

நாமக்கலில் ஏழை தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரகம் திருடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி, "தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், அதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை. இதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக் குழு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Tags :