முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு-அண்ணாமலை பதில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் ஊழலின் உறைவிடமான திமுகவில் இருந்து கொண்டு, ஊழல் என்று பிறரைக் குறை சொல்வது பொதுமக்களை நகைக்க வைக்கும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார்.
சிஏஜி அறிக்கையால் மத்திய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியிருக்கிறது என முதலமைச்சர் அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார்;இவர் இதற்கு முன்பு எப்போதாவது சிஏஜி அறிக்கையை படித்துப் பார்த்திருப்பாரா என்ற கேள்வி எழுகிறது;சிஏஜி அறிக்கையில் செலவினங்கள் அதிகரித்து உள்ளதாக தான் கூறப்பட்டுள்ளது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில்

Tags : annamalai ips