கும்முடிபூண்டி முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில்.....மூன்று பேர் குற்றவாளி.

by Admin / 21-11-2025 09:53:21pm
கும்முடிபூண்டி முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ  பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில்.....மூன்று பேர் குற்றவாளி.

இன்று கும்முடிபூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2005 ஆம் ஆண்டு சுதர்சனம் தனது வீட்டில் இருந்தபோது பவாரியா கொள்ளை அவர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று 62 சவரன் நகைகளையும் கொள்ளை அடித்துச் சென்றது. இந்நிகழ்வு தமிழகம் முழுவதையும் உலுக்கியது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஐஜி ஜாங்கிட் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்  கொள்ளையர்களை தேடிய நிலையில் அது பவாரியா கொள்ளை கும்பல் தான் காரணம் என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்தது. இவ் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஓம் பிரகாஷ் என்கிற குற்றவாளி சிறைச்சாலையில் செய்து கொண்டார். மற்றவர்களான ஜெகதீஷ், ராகேஷ் ,அசோக் ,ஜெல்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிராக வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. என்று வழக்கின் தீர்ப்பு வெளியானதில் மூன்று பேர் குற்றவாளி என  தீர்ப்பளிக்கப்பட்டது.வரும் 24ஆம் தேதி மற்றொரு குற்றவாளிக்கு சேர்த்து தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via

More stories