மல்யுத்தம் - இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மல்யுத்தம் - இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி
தீபக் புனியா
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை நடைபெற்ற மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார்.
57 கிலோ மல்யுத்த பிரிவில் ரவிக்குமார் தஹியாவும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
காலிறுதியில் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை வீழ்த்தினார்.
Tags :