சமூக அறிவியல் பாடம் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. சமூக அறிவியல் பாட செயல்பாடுகள் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
உடுமலை அடுத்த திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சமூக அறிவியல் பாட செயல்பாடுகள் தயாரிப்பு குறித்த வழிகாட்டுதல் பயிற்சி நடந்தது. பெத்தேல் நர்சரி பள்ளியில் நடந்த இந்த பயிற்சியில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு 3 முதல் 5-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாட செயல்பாடுகள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக இப்பயிற்சிக்கு முதல்வர் சங்கர் தலைமை வகித்தார். முதுநிலை விரிவுரையாளர்கள் பாபிஇந்திரா, சுப்பிரமணி ஆகியோர் பாட செயல்பாடு தயாரிப்பு, கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்தல் குறித்து விளக்கிப்பேசினர்.
இதுகுறித்து பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் கூறியதாவது:-
கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. சமூக அறிவியல் பாட செயல்பாடுகள் தயாரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் ஆசிரியர்கள் கண்ணபிரான், லீலா, கயல்விழி, காயத்ரி, ரம்ஜான்பர்வீன் ஆகியோர் ஈடுபடவுள்ளனர்.
அதற்கான பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வித் திறனையும், கருத்துகளையும் வலுவூட்டும் வகையில் பாட செயல்பாடுகளின் தயாரிப்பு இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.சமூக அறிவியல் பாடம் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி
Tags :