மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து நிற்காவிட்டால் ....மல்லிகார்ஜுன கார்கே ,

by Admin / 25-02-2024 11:51:04pm
 மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து நிற்காவிட்டால் ....மல்லிகார்ஜுன கார்கே ,

மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து நிற்காவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் "சர்வாதிகாரம்" தலைவிரித்தாடுவது உறுதி.

 பெங்களூருவில், அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு இரண்டு நாள் மாநாட்டில் ஞாயிறு அன்று கலந்து கொண்ட   காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது...,

'தற்போதுள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பை அகற்றிவிட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சதி வேலைகள் நடப்பதாகவும், அதனை மாற்ற துடிப்போரை வரும் மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் ஒரே அணியில் ஒருங்கிணைந்து நின்று எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுவது உறுதி. 

நம்முடைய வாழ்கை சர்வாதிகார கும்பலுடனா? அல்லது நீதியுடனா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்' 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

அரசியலமைப்பு நிலைத்திருந்தால் இந்த நாட்டின் ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். ஜனநாயகம் நிலைத்திருந்தால் அனைவரும் செழிப்புடன் வாழ முடியும். 

ஆனால் இன்று சமத்துவத்துவத்தை வலியுறுத்தும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் அல்லது அரசியலமைப்பை மனதில் கொண்டு செயல்படும் அரசாங்கம் எதுவும் மத்தியில் இல்லை,அதனால்தான் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும், அதைக் கடைப்பிடிப்பதும் மிக முக்கியமானது .

தற்போதுள்ள அரசியலமைப்பு அழித்துவிட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் சதி நடப்பதாகவும், இதனால் நாட்டுக்கே ஆபத்து ஏற்படும். அவர்களை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் யாரும் வாழ முடியாது. நாட்டில் ஜனநாயகமும், சமத்துவமும் நிலைத்திருக்க வேண்டுமானால் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை திணிக்க முயற்சிப்பதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டாா்..

 

 

Tags :

Share via