டெக்சாஸில் பயங்கர நிலநடுக்கம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. டெக்சாஸின் மிட்லாண்ட் நகரில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிட்லாண்டில் இருந்து 22 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. பூமியின் உள்பகுதியில் 9 கி.மீ ஆழத்தில் நகர்வுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டெக்சாஸை தாக்கிய நான்காவது பெரிய நிலநடுக்கம் இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் இன்னும் தெரியவில்லை.
Tags :



















