ஆப்கானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய மருத்துவ உதவி

by Admin / 30-01-2022 02:12:44pm
ஆப்கானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய மருத்துவ உதவி

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் நான்காவது தவணையாக மூன்றுடன் மருந்துகளை இந்திய அனுப்பியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருந்துகள் காபூலில் உள்ள இந்திராகாந்தி குழந்தைகள் நல நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் வரும் வாரங்களில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மருந்துகள் மற்றும் உணவு தானியங்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகளை வழங்க இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய ஆப்கானிஸ்தானுக்கு  மூன்றரைடன் மருந்துகள் 5 லட்சம் தடுப்பூசிகள் வழங்கியுள்ளது


 

 

Tags :

Share via

More stories