ராசி பலன்கள்-17.03.2022

by Editor / 17-03-2022 11:53:22pm
 ராசி பலன்கள்-17.03.2022

மேஷம்
மார்ச் 18, 2022

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.

 
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்


அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பரணி : சுறுசுறுப்பான நாள். 

கிருத்திகை : கட்டுப்பாடுகள் குறையும்.
---------------------------------------


ரிஷபம்
மார்ச் 18, 2022

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்திருந்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். ஆசைகள் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். 

ரோகிணி : தெளிவு பிறக்கும். 

மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------


மிதுனம்
மார்ச் 18, 2022

திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அரசு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வருவாய் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

திருவாதிரை : அனுசரித்து செல்லவும். 

புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும். 
---------------------------------------


கடகம்
மார்ச் 18, 2022

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவு தேவைக்கு ஏற்ப இருக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு முயற்சிக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை 

 
புனர்பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 

பூசம் : திருப்திகரமான நாள். 

ஆயில்யம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 
---------------------------------------


சிம்மம்
மார்ச் 18, 2022

சுபகாரிய முயற்சிகளில் அலைச்சலுக்கு பின்பு சாதகமான முடிவு கிடைக்கும். எந்த செயலையும் நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் வேண்டும். கனிவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

  
மகம் : சாதகமான நாள். 

பூரம் : உதவி கிடைக்கும். 

உத்திரம் : கவனம் வேண்டும். 
---------------------------------------


கன்னி
மார்ச் 18, 2022

இழுபறியான சில பணிகளை எளிதில் முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழப்பம் நிறைந்த நாள்.

 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


உத்திரம் : இழுபறிகள் குறையும். 

அஸ்தம் : மாற்றமான நாள். 

சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------


துலாம்
மார்ச் 18, 2022

வரவுக்கு ஏற்ற செலவுகள் அதிகரிக்கும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் சிறு சிறு மாறுதல்களின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

 
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.

சுவாதி : முன்னேற்றமான நாள். 

விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும். 
---------------------------------------

விருச்சிகம்
மார்ச் 18, 2022

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 
விசாகம் : லாபம் மேம்படும்.

அனுஷம் : நன்மை உண்டாகும்.

கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 
---------------------------------------

தனுசு
மார்ச் 18, 2022

எதிலும் அவசரமின்றி சிந்தித்து செயல்படவும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சோர்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 


மூலம் : சிந்தித்து செயல்படவும். 

பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

உத்திராடம் : உதவி கிடைக்கும்.
---------------------------------------

மகரம்
மார்ச் 18, 2022

நிலுவையில் இருந்துவந்த பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

திருவோணம் : அனுபவம் மேம்படும். 

அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------


கும்பம்
மார்ச் 18, 2022

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். அமைதி வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும். 

சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

பூரட்டாதி : மனக்கசப்புகள் ஏற்படலாம்.
---------------------------------------


மீனம்
மார்ச் 18, 2022

புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்பாராத இடத்தில் இருந்து சில உதவி கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.  சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


பூரட்டாதி : தடைகள் குறையும். 

உத்திரட்டாதி : புரிதல் ஏற்படும். 

ரேவதி : மாற்றம் உண்டாகும்.

 

Tags :

Share via