தமிழ்நாட்டில் 1000 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு
இந்தியாவில் H3N2 வகைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்தியா முழுவதும் H3N2 காய்ச்சல் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சல் 3-4 நாட்களுக்கு தொடர்கிறது. மாநில சுகாதாரத் துறையிடம் போதிய மருந்துகள் இருப்பு உள்ளது. காய்ச்சல் பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றார்.
Tags :