ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

by Editor / 12-02-2025 08:57:17am
ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.

தமிழ்நாட்டை 2030க்குள் ரூ.86 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார மாநிலமாக உருவெடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

7 ஆயிரம் 375 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை 18வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உலகளாவிய திறன் மையங்கள், தோல் அல்லாத காலணி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, 7 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம், வேலூர், திருச்சி, தூத்துக்குடி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Tags : ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Share via