அதிமுக விவகாரத்தில் இன்று முக்கிய தீர்ப்பு.

by Editor / 12-02-2025 08:59:28am
அதிமுக விவகாரத்தில் இன்று  முக்கிய தீர்ப்பு.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி ரவீந்திரநாத், புகழேந்தி ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, புதிய தலைமையைத் தேர்வு செய்தது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும், பெரும்பாலான உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதால் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது

 

Tags : அதிமுக விவகாரத்தில் இன்று முக்கிய தீர்ப்பு.

Share via