மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு பணி இன்று
தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியுள்ளது.. இந்தப் பணி ஜனவரி 24, 2026 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப ரீதியான சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியுள்ளது. இந்த மின்னணு சரிபார்க்கும் பணி அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்க ப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனங்களின் பொறியாளர்கள் இந்த சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
Tags :


















