சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது..

by Admin / 11-12-2025 11:18:57am
 சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது..

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. டிசம்பர் 4ஆம் தேதி உடன் முடிவடையயிருந்த இப் பணிகளுக்கான காலக்கெடு புயல் மற்றும் மழை போன்ற காரணங்களால் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் தொடர்ந்து இடம்பெற பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயர்கள் போன்றவற்றை நீக்கி தகுதி உள்ள பட்டியலை உருவாக்க இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via