நாட்டு வெடியை கடித்த பசுவின் வாய் கிழிந்த பரிதாபம்

by Staff / 11-03-2023 12:56:56pm
நாட்டு வெடியை கடித்த பசுவின் வாய் கிழிந்த பரிதாபம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி வடக்குதெருவை சேர்ந்த பெரியகருப்பன் (48). பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை அங்குள்ள மலையடிவாரத்தில் பசுமாடு மேய்ந்த போது அப்பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்துள்ளது. உடனே பயங்கர சத்தத்துடன் வெடி குண்டு வெடித்தது. இதில் மாட்டின் வாய் பகுதி பிளந்து ரத்தம் கொட்டியது. இந்த நாட்டு வெடி குண்டு எப்படி அந்த இடத்திற்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories