தமிழக வெற்றி கழகம் அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில், என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது.

by Admin / 05-05-2026 01:43:38am
தமிழக வெற்றி கழகம் அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில், என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் தருவாயில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. பல்வேறு கருத்துக்கணிப்பில் திமுக அணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து உருவாக்கம் பொய்யாக்கப்பட்டு 60 இடங்களில் திமுக வெற்றி பெற்ற கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஐந்து வெற்றியும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தல இரண்டும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஒன்றும் விடுதலை சிறுத்தை கட்சி இரண்டும் என 73 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. 140 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் அ.திமுக ஆட்சி அமைக்கும் என்று ஒரு சில கருத்து கணிப்புகள் தெரிவித்த நிலையில், அதிமுக 43 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளையும் முன்னிலை வகிக்கின்ற நிலை ,தமிழக அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்திற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க நூத்தி பதினெட்டு இடங்கள் தேவை என்கிற நிலையில் ,இன்னும் பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேவை. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சியினோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க போகிறது என்றும் இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை. இது குறித்தான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்கிற தகவலும் வந்து கொண்டிருக்கின்றன. திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்கின்ற பட்சத்தில் அந்த இடம் காலியாகி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும்பொழுது தனக்கு ஆதரவு அளிக்கின்ற கட்சிகளின் உறுப்பினர்களின்  தகவல்  தரப்பட வேண்டும். அவ்வாறு கட்சிகள் வேறு வேறு கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளை ஒருங்கிணைத்து தம் பலத்தை தமிழக வெற்றிக்கழகம் நிரூபித்து ஆட்சி அமைக்கின்ற பட்சத்தில், கூட்டணியில் வந்து ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக நின்ற கட்சிகள் கேட்கின்ற பதவிகளை கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தமிழக வெற்றி கழகம் தள்ளப்படும். அதிமுகவோடு கூட்டணி சேருமா? இல்லை .காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோருமா ?என்கிற ஊகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது இருக்கின்ற நிலையில், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கின்ற கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் இருப்பதனால், ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆனால் , ஆளுநர் சட்டமன்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பலத்தை நிரூபிக்க சொல்லி அவகாசம் வழங்குவார். அந்த நேரத்தில் ,மற்ற கட்சிகளுடைய ஆதரவை தமிழக வெற்றி கழகம் கோரும் பொழுது, நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படலாம். இல்லை .எனில் ,ஆட்சியில் பங்கு கேட்டு அதன்படி ஆதரவு நல்கலாம். இது போன்ற ஒரு சூழ்நிலையில், இப்பொழுது தொங்கு சட்டமன்றம் அமையும் என்கிற நிலை தான் உள்ளது. தமிழக வெற்றி கழகம் அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில், என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது இன்னும் ஒரு சில நாளில் தெரிந்துவிடும்.

 

Tags :

Share via
Logo