கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர் நகரைச் சேர்ந்த சேர்ந்த ஆனந்த் பிரகதீஸ்(20) என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிள்ளனர். இதே போன்று செண்பக நகரில் வீட்டிற்குள் புகுந்து கஸ்தூரி என்பவரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இரு உடல்களை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த சம்பவம் நடைபெற்ற அரைமணி நேரத்திற்குள் செண்பகா நகர் 3வது தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மனைவி கஸ்தூரி(45) என்பவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கஸ்தூரி மற்றும் அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கஸ்தூரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட கஸ்தூரி டைப்பிங் இன்ஸ்டியூட் மற்றும் இ.சேவை மையம் நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு கொலை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றள்ளாத என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : கோவில்பட்டியில் இரவில் பெண் உள்பட 2 பேர் வெட்டி கொலை



















