3 பேர் கொண்ட மர்ம கும்பலால் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை

by Editor / 09-08-2022 09:19:44am
3 பேர் கொண்ட மர்ம கும்பலால் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஜெஜெ நகர் பகுதியில் வசித்து வந்த திமுக உறுப்பினர் மோகன், நேற்றிரவு அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி சட்டம் ஒழுங்கு போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories