தடுப்பூசி போடும் பணிகள் தொடரும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

by Editor / 01-06-2021 05:00:17pm
தடுப்பூசி போடும் பணிகள் தொடரும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 



ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில், தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் கருப்பு பூஞ்சை சோதனை மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறியது,
தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனைத்து பரிசோதனைகளையும், ஒரே இடத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கருப்பு பூஞ்சை எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, கருப்பு பூஞ்சை குறித்து ஆராய 13 வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 4.20 லட்சம் தடுப்பூசிகள் .வருவதால், . தொடர்ந்து தடுப்பூசி போடப்படும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். . சென்னைக்கு வரவுள்ள தடுப்பூசிகளை உடனே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo