அண்ணனை குத்திக்கொன்ற தம்பி மற்றும் தம்பி மகனுக்கு போலீசார் வலை வீச்சு
சுரண்டை அருகே உள்ள கீழச் சுரண்டை வடக்கு தெருவை சேர்ந்த சுடலைமாடன் என்பவரது மகன் ஆறுமுகசாமி (54).இவரது சகோதரர் மாரியப்பன்(50) இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் நடை பாதையில் அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது.இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சகோதரர்கள் என்பதால் அவர்களே புகாரை வாபஸ் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று (நவ-1) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் சகோதரர்கள் ஆறுமுகச்சாமி மற்றும் மாரியப்பன் இடையே நடைபாதை தொடர்பாக மீண்டும் தகராறு நடந்துள்ளது. அப்போது மாரியப்பன் மற்றும் அவரது மகன் மணிகண்டன்(25) இருவரும் சேர்ந்து ஆறுமுகசாமியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. ஆறுமுகசாமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுரண்டை போலீசார் ஆறுமுகசாமி உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.செல்லும் வழியில் ஆறுமுகசாமி பரிதாபமாக பலியானார்.இச்சம்பவம் தொடர்பாக சுரண்டை காவல் ஆய்வாளர் செந்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தென்காசி எஸ்.பி. சீனிவாசன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.அதை தொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார். பாதை பிரச்சனை தொடர்பாக அண்ணனையே தம்பியும்,தம்பி மகனும் கொலை செய்த சம்பவம் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : அண்ணனை குத்திக்கொன்ற தம்பி மற்றும் தம்பி மகனுக்கு போலீசார் வலை வீச்சு