என் அப்பாவை பற்றி எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது ; கலைஞர் ஒரு சிங்கம்- முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்

by Admin / 03-04-2026 11:45:46pm
 என் அப்பாவை பற்றி  எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது ; கலைஞர் ஒரு சிங்கம்- முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன் தந்தை கலைஞரை வீட்டுக்குள் சிறை வைத்தவர் மு .க .ஸ்டாலின் என்று நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய பொழுது குறிப்பிட்டிருந்தார்.இதற்கு நெல்லையில் நடந்தகூட்டத்தில் தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு .க .ஸ்டாலின், என்னை என்ன வேண்டுமானாலும் விமர்சியுங்கள். அதற்கு அரசியலில் இடம் உண்டு. ஆனால், என் தந்தையை பற்றி பேச எவருக்கும் உரிமைகிடையாது.என்று திட்டவட்டமாக தெரிவித்ததோடு, தனது தந்தை கலைஞர் ஒரு சிங்கம் என்றும் அவர் வாழ்ந்த காலம் முழுவதும் சிங்கமாகவே திகழ்ந்தவர் என்றும் பெருமிதத்தோடு குறிப்பிட்டதோடு ஒரு முன்னாள் முதலமைச்சர் தரம் தாழ்ந்த வகையில் இத்தகைய அவதூறுகளை பரப்புவது அரசியல் நாகரிகம் அன்று என தனது கண்டனத்தையும் பதிவு செய்தார் .மறைந்த தலைவர்களை குறித்து தற்போதைய அரசியலில் விமர்சிப்பது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து .கலைஞரின் உடன்பிறப்புகளின் கருத்தும் இதுதான் என்றும் தெளிவு படுத்தினார்.

 

Tags :

Share via
Logo