ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனையில் 12 பேர்

by Staff / 31-10-2022 11:06:53am
ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனையில் 12 பேர்

திமுகவின் முதன்மைச் செயலாளரும், தற்போதைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி விடியற்காலை நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார்

இவ்வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 12 ரவுடிகளின் பட்டியலை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தின் பிரபல ரவுடிகள் திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்தியராஜ், மாரிமுத்து, தினேஷ்,  திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories