OMR சாலை சுங்கச்சாவடியில் 1 ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம்உயர்வு.

தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய சாலைகளில் சுங்கச் சாவடிகளில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் தற்போது பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் 10% கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது OMR சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ₹1லிருந்து 24 வரை உயர்வு,வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ₹34லிருந்து ₹1,500 வரை உயர்வு,உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ₹50லிருந்து ₹100 வரை உயர்வு.

Tags : Increase in tolls for vehicles at OMR Road Customs.