தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

by Admin / 22-02-2026 06:37:21pm
 தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டல மேலெடுத்து சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி விருதுநகர் நாகப்பட்டினம், திருவாரூர் ,ராமநாதபுரம் மற்றும் தேனி, திண்டுக்கல் ,மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் .

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மலையை விட பணியின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது .அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
 

Tags :

Share via

More stories

Logo