தொழிலாளியை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை.சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

by Editor / 16-08-2023 04:32:25pm
தொழிலாளியை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை.சேலம் நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 53). தறிநெய்யும்  தொழிலாளி.
கோபாலும், அவரது அண்ணன் விஜயனும் சேர்ந்து தறி தொழில் நடத்தி வந்தனர்.மொத்தம் 9 தறி போடப்பட்டு கூட்டாக சகோதரர்கள் தொழில் புரிந்துவந்தநிலையில் இவரது அண்ணன் விஜயன்.இறந்து விட்டார்.விஜயன் இறந்து விட்டதால் அவரது மகன் குணசேகரன் தறியை தனக்கு பிரித்து தருமாறு கேட்டு  சித்தப்பா கோபாலிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் கோபால் தறியை பிரித்து கொடுக்காமல் சேர்ந்தே இருக்கட்டுமென கூறிவந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில்  கடந்த 2017 ஆம் ஆண்டு கோபாலுக்கும், விஜயனின் மகன்  குணசேகரன் , மற்றும் உறவினர்கள் ரகுநாதன், ராஜு, பாரதி ,சாந்தாமணி ஆகியோருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் கோபமடைந்த விஜயனின் மகன் குணசேகரன் மற்றும் உறவினர்கள் கோபாலை தறிக்கு பயன்படுத்தும் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கோபால் இறந்துவிட்டார்.இதன் தொடர்ச்சியாக கோபாலைகொலைசெய்த  குணசேகரன் ,ரகுநாதன், ராஜு, பாரதி ,சாந்தாமணி ஆகியோரை போலீசார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர்.இந்த வழக்கு  சேலம் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு  நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி ரவி விசாரித்து கைது செய்யப்பட்ட குணசேகரன் மற்றும் ரகுநாதன், ராஜு ,பாரதி, சாந்தமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனைவிதித்தும்  , தலா ரூபாய் 7 ஆயிரம் அபராதமும் விதித்து  தீர்ப்பளித்தார்.

 

Tags : 5 பேருக்கு ஆயுள் தண்டனை.நீதிமன்றம் தீர்ப்பு

Share via