கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க 13 வது நாளாக தடை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 13,வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்து சீராகும் வரையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தொடரும் என தேவதானப்பட்டி வனத்துறை அறிவித்துள்ளனர்.
Tags : கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க 13 வது நாளாக தடை.



















