தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

by Editor / 30-05-2023 08:41:30am
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf இந்த இணையதளத்தை பார்க்கவும்.என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories