இந்தியாவின் 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கி செப்டம்பர் 30 2026 வரைநடக்கிறது.

by Admin / 01-04-2026 09:06:36am
இந்தியாவின் 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கி செப்டம்பர் 30 2026 வரைநடக்கிறது.

இந்தியாவின் 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முதற்கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது.

 முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கி செப்டம்பர் 30 2026 வரை ஆறு மாத காலத்திற்கு நடைபெறும் நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் அதிகாரிகள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 வீட்டு வசதி அடிப்படை வசதிகள் மற்றும் சொத்துக்கள் குறித்து மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 இது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். கணக்கெடுப்பாளர்கள் மொபைல் செயல்கள் மூலம் தரவுகளை சேகரிப்பார்கள். பொதுமக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான தனிநபர் கணக்கெடுப்பு ஜாதி வாரியான தகவல்களுடன் பிப்ரவரி 2027-இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு 15 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படக்கூடிய புள்ளி விபரம் சேகரிப்பு தொடர்பான செயல்பாடாகும்.

 

Tags :

Share via

More stories

Logo