பாடகர், இசையமைப்பாளர், பேச்சாளர் அருணா சாய்ராமுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

by Staff / 01-11-2022 04:36:56pm
பாடகர், இசையமைப்பாளர், பேச்சாளர் அருணா சாய்ராமுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர், பேச்சாளர் என பன்முக திறமைகளை கொண்ட அருணா சாய்ராம் இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்காகவும் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது.செவாலியர் விருதிற்கு அருணா சாய்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சர் ரீமா அப்துல் மலாக் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்தின் அதிகாரி லிஸ், “செவாலியர் விருது பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு அளித்த பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாட்டின் பாராட்டுக்கான அடையாளமாகும். கர்நாடக இசையின் அழகையும் நுணுக்கத்தையும் 30 ஆண்டுகளுக்கும் மேல் உலகம் முழுவதும் பரப்பியிருக்கிறீர்கள். இந்த விருது பிரான்ஸ் நாட்டின் மீது அருணா சாய்ராம் கொண்டுள்ள நட்பை குறிக்கிறது. பிரான்ஸ் மற்றும் இந்திய நாடுகளை நெருக்கமாக கொண்டு வரவும், கலாச்சார மற்றும் கலை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நீங்கள் பெரிதும் பங்களித்துள்ளீர்கள்” என பாராட்டியுள்ளார்.

 

Tags :

Share via