எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

by Admin / 01-11-2022 04:16:35pm
 எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 சென்னையில் மழை.வடகிழக்குப்பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்தது.இன்றும்மழை தொடர்ந்து காலையிலிருந்தே பெய்து வருவதால்,மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது ..சென்னையில் பலதெருக்களில் தண்ணீர் குளம் போல  தேங்கி உள்ளதுமாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும்பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. .இந்நிலையில்,வானிலை மைய தென்மண்டல இயக்குனர்பாலசந்திரன்  செய்தியாளர் சந்திப்பில்,சென்னையில் இன்னும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவித்தார்.கனமழை காரணமாக  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார்நிலையிலிருப்பதாகவும் .சென்னையில் ஒரு குழுவும்நீலகிரியில் ஒரு குழுவும் அனுப்பட்டுள்ளநிலையில் மொத்தம் 13 மீட்புக்குழுவினர் தயார்நிலையில் உள்ளதாகவும் அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை ,செங்கல்பட்டு ,வேலூர் ,திருப்பத்தூர் ,ராணிபேட்டை ,திருவண்ணாமலை,காஞ்சீபுரம்,திருவள்ளுர்  உள்பட எட்டு மாவட்டங்களுக்குகனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு,18 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via