கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு உறவினர்கள் சாலைமறியல்.

by Editor / 02-05-2024 12:06:17am
கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு உறவினர்கள் சாலைமறியல்.

 விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குவாரிக்கு அருகில் உள்ள கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமானது.
மேலும் குவாரியில் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உழைப்பாளர்கள் தினத்தில் விபத்து நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 

Tags : கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழப்பு உறவினர்கள் சாலைமறியல்.

Share via

More stories