அதிமுக 46 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எடப்பாடி தான் காரணம் என்றால் 181 தொகுதிகளில் தோல்வியடைந்ததற்கும் அவர் தானே பொறுப்பு என்று சி.வி. சண்முகம் கடும் குற்றச்சாட்டு

by Admin / 11-08-2026 12:50:39am
அதிமுக 46 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எடப்பாடி தான் காரணம் என்றால் 181 தொகுதிகளில் தோல்வியடைந்ததற்கும் அவர் தானே பொறுப்பு என்று சி.வி. சண்முகம் கடும் குற்றச்சாட்டு

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தேர்தலில் வெற்றி பெற்றால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமிதான் காரணம் என்று என்று கூறுபவர்கள் தோல்வி அடைந்த 181 தொகுதிகளுக்கு அவர் பொறுப்பேற்க முன்வருவாரா என்றும் வெற்றி பெற்றால் தனக்கு பெருமை தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் மீது பழியை போடும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தவிர வேறு யார் இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அதிமுக எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்றும் அவரது சொந்த மாவட்டமான சேலத்திலேயே அதிமுக 11 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகவும் வட மாவட்டங்களில் அதிமுக 34 இடங்களை கைப்பற்றியதற்கு பாமக உடனான கூட்டணி மட்டுமே காரணம் இதற்கு எடப்பாடி தனிப்பட்ட செல்வாக்களால் கிடைத்தது அல்ல என்றும் சென்னை டெல்டா மற்றும் தர்மபுரி அதிமுக முற்றிலும் துணை தெரியப்பட்டிருப்பதாகவும் தென் தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறவே இல்லை என்றும் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு உதயநிதி ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய ஒப்பந்தம் செய்ய முயன்றதாகவும் திமுக வழியில் இருந்து ஆதரவளித்து இபிஎஸ்ஐ முதலமைச்சராக முன்மொழிந்ததாகவும் திருமாவளவனை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்றும் முப்பது அமைச்சர்களை நாம் வைத்துக் கொள்ளலாம் என்றும் தான் தெரிவித்ததாகவும் சொன்ன கட்சியில் யாரேனும் தட்டி கேட்டால் ஆலோசனை செய்யாமல் எடப்பாடி பழனிச்சாமி ஒருதலைப் பட்சமாக மூத்த நிர்வாகிகளை கூட விட்டு வைக்காமல் நீக்கி விடுவதாகவும் தேர்தல் தோல்விகள் குறித்து விவாதிக்க உடனடியாக அதிமுக பொது குழுவை கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி பேசினார். இப்படிக்கு எதிராக எஸ்பி வேலுமணி நத்தம் விசுவநாதன் ஆகியோரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் சி.வி. சண்முகத்தின் இந்த பேட்டி அரசியல் களத்தில் மேலும் வெப்பத்தை அதிகரித்து உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo