மதுரை அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய 4 பேர் கைது: போலீசார் அதிரடி.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்கேன் பிரிவில் வேலைபார்த்துவரும் சிவ சந்துரு, மருத்துவமனை செக்யூரிட்டி (தனியார்) வேலை பார்க்கும் பாசிங்காபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார் இவர்கள் இருவரும் மருத்துவமனை வரும் நோயாளிகளிடம் செல்போன்களை திருடி வழக்கில் காவல் ஆய்வாளர் தாமரை விஷ்ணு தலைமையிலான போலீசார் பிடித்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
அதே போன்று நோயாளிகளுக்கு சாப்பாட்டு வண்டியில் சாப்பாடு வைத்து தள்ளி கொண்டு செல்லும் ஊழியர் ஆறுமுகம் அவரது மகன் வடிவேலு ஆகியோரும் செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.அரசு மருத்துவமனையில் தொடர் செல் போன் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது - பரபரப்பு போலீசார் அதிரடி
Tags : மதுரை அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய 4 பேர் கைது: போலீசார் அதிரடி